விவிவி : தமிழில் ராம் சரணின் படம்

தினமலர்  தினமலர்
விவிவி : தமிழில் ராம் சரணின் படம்

தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம் வினயை விதேயா ராமா" (விவிவி). பிரபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இயக்கியுள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாகவும், விவேக் ஓபராய் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், என பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாகியுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். நேற்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியான இந்தப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் வெளிவருகிறது.

மூலக்கதை