கலர்ஸ் காமெடி நைட்

தினமலர்  தினமலர்
கலர்ஸ் காமெடி நைட்

தமிழில் ஒளிபரப்பாகும் எல்லா சேனல்களுமே காமெடி நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பு செய்கிறது. திரைப்படங்களுக்கு அடுத்தபடியாக மக்கள் விரும்புவது காமெடி நிகழ்ச்சிகள் தான். அந்த வகையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியும் கலர்ஸ் காமெடி நைட் என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

மற்ற நிகழ்சிகளுக்கும், இதற்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால். இந்த நிகழ்ச்சியில் வாரம்தோறும் ஒரு சினிமா பிரபலம் கலந்து கொள்கிறார். அவர் வெறும் பார்வையாளராக இருந்து கொண்டு கைதட்டி சிரித்துச் செல்லமாட்டார். அவரும் காமெடி கலைஞர்களுடன் கலந்து கொண்டு நடிப்பார், சிரிக்க வைப்பார்.

இந்த நிகழ்ச்சியை மிர்சி விஜய் குழுவினர் நடத்துகிறார்கள். விஜய் தொகுத்து வழங்குகிறார். கார்த்திக் கலந்து கொண்ட நிகழ்ச்சியுடன் இன்று(ஜன.,12) முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

மூலக்கதை