மீண்டும் பாலிவுட்டில் பிரபுதேவா

தினமலர்  தினமலர்
மீண்டும் பாலிவுட்டில் பிரபுதேவா

பாலிவுட் படங்களை இயக்கிக் கொண்டிருந்த பிரபுதேவா, சில படங்கள் தோல்வி அடையவே தமிழுக்கு திரும்பினார். இங்கு தீவிரமாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது மீண்டும் பாலிவுட்டுக்கு திரும்புகிறார். தொடர் தோல்விகளை கொடுத்துக் கொண்டிருந்த சல்மான்கானுக்கு வாண்டட் படத்தின் மூலம் திருப்புமுனையை தந்தவர் பிரபுதேவா. தற்போது தோல்விகளை சந்தித்து வரும் சல்மான்கான், அதனை சரிக்கட்ட மீண்டும் பிரபு தேவாவை அழைத்திருக்கிறார்.

சல்மான்கான் நடித்து சூப்பர் ஹிட்டான படம் தபாங். அபினவ் காஷ்யப் இயக்கிய இந்தப் படத்தை சல்மான்கான் சகோதரர் அர்பாஸ்கான் தயாரித்திருந்தார். அதன் பிறகு அதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. இதனை தயாரிப்பாளர் அர்பாஸ்கானே இயக்கி இருந்தார் இதுவும் வெற்றி பெற்றது.

தற்போது இதன் மூன்றாம் பாகம் தயாராக இருக்கிறது அதனை பிரபுதேவா இயக்குகிறார். இதனை தயாரிப்பாளர் அர்பாஸ்கான் உறுதிப்படுத்தி உள்ளார். முதல் இரு பாகங்களில் ஹீரோயினாக நடித்த சோனாக்ஷி சின்ஹாவே இதிலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

மூலக்கதை