உண்மை கதைகள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்: கே.பாக்யராஜ்

தினமலர்  தினமலர்
உண்மை கதைகள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்: கே.பாக்யராஜ்

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ளது கிரிஷ்ணம் என்ற திரைப்படம். இது மலையாள தொழில் அதிபர் பி.என்.பலராம் என்பவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக கொண்ட படம். குருவாயூரப்பன் அருளால் ஒரு வீட்டிடல் ஒரு அதிசயம் நடந்தது. அந்த சம்பவத்தை அவரே திரைப்படமாக தயாரித்துள்ளார். தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார். அந்த சம்பவத்தில் தொடர்புடைய தொழிலதிபரின் மகனே ஹீரோவாக நடித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. பாடல்களை வெளியிட்டு இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது:

படம் உண்மைச் சம்பவத்தை கொண்டது என்று தயாரிப்பாளர் விரிவாகக் கூறினார். இதைக் கேள்விப்பட்டதுமே அந்தக் கதையின் நாயகன் அக்ஷய் கிருஷ்ணனைப் பார்க்க ஆவலாக இருந்தேன். நிஜமாகேவே இது அற்புதமான சம்பவம் தான். கற்பனைக் கதைக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உண்மைக்கதை என்றால் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். பார்ப்பவர் தங்களையும் அதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அப்படி ஒரு படமாக குருவாயூரப்பன் அருள் பற்றிப் பேசும் படமாக கிரிஷ்ணம் படமும் இருக்கும் என நம்புகிறேன்.

என் வாழ்க்கையிலும் சில அற்புதங்கள் பார்த்த அனுபவம் உண்டு. எங்கள் ஊரில் பைத்தியம் போலப் பார்க்கப்பட்ட சாயம்மா என்ற பாட்டி ஒரு நாள் குறிசொல்லும் பெண்ணாக மாறிக் குறி சொல்ல ஆரம்பித்தார். பலருக்கும் சரியாக இருந்தது. நாங்கள் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டு வேறு ஊர் போனோம். மீண்டும் பல நாள் கழித்து அவரைப் பார்த்த போது, என் அண்ணனுக்கு விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நடந்தது பற்றியெல்லாம் கூறினார். எங்களுக்கு ஆச்சரியம். என்னைப் பார்த்து நீ இன்னுமா இந்த ஊரை விட்டுப் போகவில்லை? இங்கே இருக்காதே வெளியூர் போ என்றார். எனக்கு ஆச்சரியம். ஏனென்றால் நான் அப்போது சினிமா கனவில் இருந்தேன்.

பிறகு நான் சினிமாவுக்காக சென்னை புறப்பட்டபோது என் அண்ணன் ஒரு பெரிய ஜோதிடரை அழைத்து வந்தார். அவரோ எனக்குச் சினிமாவே சரிப்பட்டு வராது இரும்பு சம்பந்தப்பட்ட வேலைதான் சரி வரும் என்றார். நான் சினிமா தான் என்று பிடிவாதமாக இருந்தேன். என் அம்மாவிடம் சினிமாவில் கேமரா, ஸ்டாண்ட், டிராலி எல்லாம் இரும்புதான் என்னை நம்பு என்று சொல்லிவிட்டு புறப்பட்டேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உள்பட கிரிஷ்ணம் குழுவினர் கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்போம். என்றார்.

மூலக்கதை