ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமாவாகிறது

தினமலர்  தினமலர்
ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமாவாகிறது

தமிழ்நாட்டில் சிவகாசியில் பிறந்து குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, 80களில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. 90களில் பாலிவுட்டுக்குச் சென்று அங்கும் முன்னணி நடிகை ஆனார். 300 படங்களுக்குமேல் நடித்த ஸ்ரீதேவி, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தனது 54வது வயதில் துபாயில் நட்சத்திர விடுதியில் குளியலறையில் தடுமாறி விழுந்து இறந்தார்.

ஸ்ரீதேவியின் வாழ்க்கையை அவரது கணவர் போனி கபூர் திரைப்படமாக எடுக்க இருப்பதாக சொன்னார். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தது. அதனால் சில காலம் அமைதியாக இருந்த போனி கபூர், இப்போது ஸ்ரீதேவி வரலாற்று படத்துக்கான பணிகளில் மும்முரமாக இறங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க தகுந்த நடிகை ஒருவரை தேடிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை வரலாற்றை திரைக்கதையாக்கும் பணிகள் முடிந்திருக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாராகிறது.

இந்தியாவில் திரைப்பட நடிகைகளில் சில்க் ஸ்மிதா, சாவித்ரி வாழ்க்கை சினிமாவாக தயாராகி உள்ளது. தற்போது ஷகிலாவின் வாழ்க்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. அடுத்து ஸ்ரீதேவியின் வாழ்க்கை தயாராகிறது.

மூலக்கதை