வாய்ப்பு கேட்ட இயக்குனருக்கு பிருத்விராஜ் தந்த இன்ப அதிர்ச்சி

தினமலர்  தினமலர்
வாய்ப்பு கேட்ட இயக்குனருக்கு பிருத்விராஜ் தந்த இன்ப அதிர்ச்சி

பிருத்விராஜ் நடிப்பில் வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியாக இருக்கும் படம் '9'. இந்த படத்தை ஜீனுஸ் முகமது என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே துல்கர் சல்மானை வைத்து '100 டேய்ஸ் ஆப் லவ்' என்கிற படத்தை இயக்கியவர். '9' படத்தின் கதையை உருவாக்கியதும் இதில் பிருத்விராஜ் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கதை சொல்ல எப்படியோ தேதி வாங்கி விட்டார் ஜீனுஸ் முகமது

கதையை கேட்டு மிகவும் ஈர்க்கப்பட்ட பிருத்விராஜ், இந்த படத்தில் தான் நடிப்பதாக ஒப்புக்கொண்டதுடன், பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் முதல் படமாக இதை தயாரிப்பதாகவும் சொல்லி இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தாராம். அதனாலேயே படத்தை கூடுதல் பொறுப்புடன் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளாராம் ஜீனுஸ் முகமது இந்த படம் சயின்ஸ் கலந்த ஹாரர் திரில்லராக உருவாகியுள்ளது.

மூலக்கதை