சென்னை வந்து பேட்ட படம் பார்த்த மலையாள இயக்குனர்

தினமலர்  தினமலர்
சென்னை வந்து பேட்ட படம் பார்த்த மலையாள இயக்குனர்

ரஜினி நடித்த பேட்ட படம் நேற்றுமுன்தினம் வெளியானது. இந்த படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அதிகாலையிலேயே காசி தியேட்டருக்கு தனது குழுவுடன் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி, அவர்களுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார். பிரபல மலையாள இயக்குனர் அருண்கோபியும் அவருடன் சேர்ந்து இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளார்

படத்தைப் பார்த்துவிட்டு, “படம் முழுவதும் ரஜினிகாந்த் உற்சாகமான மனநிலையில் சுறுசுறுப்பாக நடித்திருப்பதை பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என பாராட்டியுள்ளார் இயக்குனர் அருண்கோபி

மலையாளத்தில் திலீப்பை வைத்து ராம்லீலா என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர், தற்போது மோகன்லாலின் மகனை வைத்து இருபத்தொன்னாம் நூற்றாண்டு என்ற படத்தை இயக்கி, வரும் ஜனவரி 26 ரிலீஸ் செய்கிறார் இதையடுத்து தனது மூன்றாவது படத்தில் மோகன்லாலை இயக்க உள்ளார்

பேட்ட படத்தின் இயக்குனர் விவேக் ஹர்ஷன் இவரது படங்களுக்கு தொடர்ந்து எடிட்டராக பணிபுரிந்து வருகிறார் அவரது அழைப்பின் பேரில் பேட்ட படம் பார்ப்பதற்காகவே சென்னைக்கு வந்து படம் பார்த்துள்ளார் இயக்குனர் அருண்கோபி.

மூலக்கதை