விருது போட்டியில் திலீப்புக்கு தடை

தினமலர்  தினமலர்
விருது போட்டியில் திலீப்புக்கு தடை

மலையாள திரையுலகில் சினிமா பாரடைஸோ கிளப் (CPC) என்கிற அமைப்பு சார்பாக சினிமா விருதுகள், கடந்த நான்கு வருடமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருட விருதுக்கான நாமினேஷன் துவங்கி உள்ளது. கிட்டத்தட்ட 12 பிரிவுகளில் விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆன்லைன் மூலம் இதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது

இந்த நிலையில் இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்து நடிகர் திலீப்பையும், குணச்சித்திர நடிகர் அலான்சியர் லேவையும் நீக்கியிருப்பது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் திலீப் கடந்தாண்டு நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்றதும், அதேபோல குணச்சித்திர நடிகர் அலன்சியர் லே, நடிகை ஒருவருக்கு பாலியல் சீண்டல் தொந்தரவு கொடுத்ததும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இவர்கள் இருவரையும் சிறந்த நடிகர், சிறந்த குணசித்திர நடிகர் என்கிற பிரிவுகளிலிருந்து நீக்கி உள்ளனராம். மற்றபடி இவர்கள் நடித்துள்ள படங்கள் மற்ற பிரிவுகளில் போட்டியிடுவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது

மூலக்கதை