சென்சார் உத்தரவுக்கு பணிந்த இம்ரான் ஹாஸ்மி

தினமலர்  தினமலர்
சென்சார் உத்தரவுக்கு பணிந்த இம்ரான் ஹாஸ்மி

ஹிந்தி இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சீட் இந்தியா'. அதாவது இந்தியாவை ஏமாற்று என்கிற அர்த்தத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சவுமிக் சென் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் படத்தின் ஹீரோ இம்ரான் ஹாஸ்மியும், இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படம் வரும் ஜனவரி 18ம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், சில காட்சிகளில் மாற்றப்பட வேண்டிய விஷயங்களை குறிப்பிட்டதுடன், படத்தின் டைட்டிலை மாற்றியே ஆகவேண்டும் என கண்டிப்புடன் கூறி விட்டனர். இதனால் வேறுவழியின்றி ஒரு வார்த்தையை முன்னால் சேர்த்து 'ஒய் சீட் இந்தியா' என மாற்றி விட்டனர்.

மூலக்கதை