ரஜினியை மீட்டு வந்ததற்கு நன்றி : மலையாள நடிகர்

தினமலர்  தினமலர்
ரஜினியை மீட்டு வந்ததற்கு நன்றி : மலையாள நடிகர்

ரஜினி படம் வெளியாகும்போது மொழி பேதம் இல்லாமல் சினிமா பிரபலங்கள் பலரும், தாங்கள் ஒரு பிரபலம் என்பதை மறந்து ரசிகர்களாக மாறுவதை அவரது ஒவ்வொரு பட ரிலீஸின் போதும் பார்த்து வருகிறோம். மலையாள இயக்குனரும், முன்னணி நடிகருமான வினித் சீனிவாசன் தீவிர ரஜினி ரசிகர்.

கடந்த முறை கபாலி படம் வெளியானபோது சென்னைக்கே வந்து ரோகிணி தியேட்டருக்கே வந்து தனது குழுவுடன் படம் பார்த்துவிட்டு சென்றார். தற்போது வெளியாகியுள்ள ரஜினியின் 'பேட்ட' படத்தை பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜுக்கு மிகப்பெரிய பாராட்டு கடிதம் ஒன்றை தமிழ் சோஷியல் மீடியாவில் எழுதியுள்ளார்.

அதில், “நீண்ட காலத்திற்குப் பிறகு தியேட்டரில் வெட்கத்தைவிட்டு ஒரு ரசிகனாக மாறி, விசிலடித்தும், நடனமாடியும் மகிழ்ந்தேன். மீண்டும் ரஜினியை எங்களிடம் கொண்டு வந்த சேர்த்ததற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி.. நீண்ட நாளைக்கு பிறகு ரஜினி படங்களிலேயே மிகச்சிறந்த படமாக இந்த பேட்ட படம் வெளியாகியுள்ளது” என பாராட்டியுள்ளார் வினித் சீனிவாசன்.

மூலக்கதை