கடல் கடந்த தமிழ் பாரம்பரியம்: துபாயில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற‌ பொங்கல் விழா

தினகரன்  தினகரன்
கடல் கடந்த தமிழ் பாரம்பரியம்: துபாயில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற‌ பொங்கல் விழா

துபாய். மலபார் கோல்ட் டையமண்ட்சின் கில்லி பொங்கல் திருவிழா 2019, தமிழையும் தமிழ் பாரம்பரியத்தையும் கடல் கடந்தும் ஒன்றிணைத்து பெருமிதப்படுத்தும் பெரும்  விழாவாக நடைபெற்றது. துபாயிலிருந்து அல் அய்ன் செல்லும் சாலையிலுள்ள அமீரகத்தின் பிரபல நிறுவனமான மர்மம் குழுவினரின் மர்மம் டைரி ஃபார்மில் காலை  மணியளவில் கோலாகலமாக தொடங்கியது. தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் தைப்பொங்கல் திருவிழாவை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரேடியோ கில்லி குழுவினர் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர்.கில்லி பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்ட  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தமிழ்ப் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் மண்மணம் மாறாத ஜல்லிக்கட்டு, உறியடித்தல், கயிரிழுத்தல் உள்ளிட்ட வீர விளையாட்டுகளும், புத்தர் கலைக்குழுவினரின் தமிழ்ப் பாரம்பரிய பறையிசை மற்றும் நடன நிகழ்ச்சியும் நடைபெற்ற‌து.இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக, தமிழ் திரைப்பட பிரபல நடிகரான சதீஸ் பங்கேற்றார்.ரேடியோ கில்லியின் CEO திரு. அசோகன் தலைமையில் Programme Director RJ நிவி,Executive Producer RJ உத்ரா, RJ ஹாசினி, RJ க்ரிஷ்,RJ அஞ்ஜனா,RJ அருண்,RJ தாரணி,RJ பிரதீப் இந்தநிகழ்வினை தொகுத்து வழங்கினர். மேலும் ரேடியோ கில்லியின் இசை ஒருங்கிணைப்பாளர் கோபாலும், செய்தி தயாரிப்பாளரான திலீப்பனும் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்றனர்.

மூலக்கதை