வெதுப்பகத்தில் பாரிய வெடிப்பு! - மீட்புப்பணிகள் தீவிரம்! - 20 பேர்வரை காயம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
வெதுப்பகத்தில் பாரிய வெடிப்பு!  மீட்புப்பணிகள் தீவிரம்!  20 பேர்வரை காயம்!!

இன்று சனிக்கிழமை காலை 9 மணி அளவில் பரிஸ் ஒன்பதாம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்று பாரிய சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளது. 
 
கட்டிடத்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறியது மட்டுமில்லாமல், வீதியின் ஓரத்தில் நின்றிருந்த வகனங்களும் சேதமடைந்தன. ஒன்பதாம் வட்டாரத்தில் உள்ள rue Trévise வீதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளது. எரிவாயு கசிவினால் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கட்டிடத்தின் மேல் தளத்தில் உளா ஜன்னல்கள் சிலவும் வெடித்து சிதறியுள்ளன. 
 
 
 
 
அப்பகுதிக்குள்
நுழையவும், வாகங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்தவர்களின் முழுமையான தகவல்கள் எதுவும் தெரிவிக்கபப்டவில்லை.  
 
தீ ஓரளவுக்கு  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. சம்பவ இடத்தில் நின்றிருந்தவர்கள் பலர் அலறல் சத்தம் கேட்பதாக தெரிவித்துள்ளனர். 
 
*தற்போது கிடைத்த தகவல்களின் படி 20 பேர்வரை காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்புகள் தொடர்பாக அறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. 

மூலக்கதை