நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் தலா 38 தொகுதிகளில் மாயாவதி-அகிலேஷ் யாதவ் கட்சிகள் போட்டி

தினகரன்  தினகரன்
நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேசத்தில் தலா 38 தொகுதிகளில் மாயாவதிஅகிலேஷ் யாதவ் கட்சிகள் போட்டி

லக்னோ: வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் மெகா  கூட்டணியில் பல்வேறு மாநில கட்சிகள் இணைய விரும்பின. இதில் முதலில் மாயாவதி, அகிலேஷ் கட்சிகள் இணைவதாக இருந்த நிலையில், திடீரென இணைவதில் இருந்து பின்வாங்கின. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல்  கூட்டணி குறித்து மகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி- சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மொத்தமுள்ள 80 தொகுதிகள் பங்கீட்டில்  உடன்பாடு ஏற்பட்டது.இதனையடுத்து உத்திரப்பிரதேசத்தின் லக்னோவில் மாயாவதி, அகிலேஷ் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று தெரிவித்தனர்.  மயாவதி பேசிபோது, இந்த செய்தியாளர் சந்திப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் எங்களின் இன்றைய கூட்டணி அறிவிப்பு பிரதமர் மோடிக்கும் , பாஜக தலைவர் அமித்ஷாவுக்கும் தூக்கத்தை கலைக்கப்போகிறது என்றார்.  நாட்டின் நலனுக்காக இருவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறோம். மக்களின் மனம் அறிந்து செயல்பட்டால் கூட்டணியை தாண்டி தேர்தலில் வெற்றி பெறுவோம் என கூறினார். காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதி மற்றும் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதிகளை தவிர்த்து தலா 38 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் விட்டுக் கொடுப்பதாகவும் மாயாவதி தெரிவித்துள்ளார். ஏற்கனவே பகுஜன் சமாஜ்  கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை