கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியான மாற்றம்!

PARIS TAMIL  PARIS TAMIL
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மகிழ்ச்சியான மாற்றம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கள் விமானங்களுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு புதிய வசதி ஒன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
 
அதற்கமைய ஓய்வறையினுள் சினிமா படங்கள் பார்ப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்கா மறறும் பிரான்ஸ் நிறுவனங்கள் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய Sky Light தொழில்நுட்பம் ஊடாக VR சினிமா அனுபவத்தை பயணிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
 
இதன் மூலம் விசேட டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Allo Sky மற்றும் Sky Kids மூலம் புதிய திரைப்படம், 2D தொழில்நுட்பத்திலான நாடகங்கள், 3D மற்றும்  360 View தொழில்நுட்பம் ஊடாக சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி பயணிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
 
எதிர்வரும் காலங்களில் இந்த வசதி நீண்ட விமான பயணங்களை மேற்கொள்ளும் ஸ்ரீலங்கன் விமானங்களிலும் அறிமுகப்படுத்தி வைப்பதற்கு  ஸ்ரீலங்கன் விமான சேவை திட்டமிட்டுள்ளது.
 
HD சினிமா அனுபவத்தை ஆசிய நாட்டிற்குள் முதல் முறையாக ஸ்ரீலங்கன் விமான  சேவையே அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.

மூலக்கதை