கனடாவில் கோர விபத்து - மூவர் பலி - பலர் ஆபத்தான நிலையில்!

PARIS TAMIL  PARIS TAMIL
கனடாவில் கோர விபத்து  மூவர் பலி  பலர் ஆபத்தான நிலையில்!

கனடாவில் ஒட்டாவ பகுதியில் பேருந்து ஒன்று போக்குவரத்து தரப்பிடத்தின் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளது.
 
இந்த கோர விபத்து கனேடிய நேரப்படி இரவு 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அதிகாரி Charles Bordeleau குறிப்பிட்டுள்ளார்.
 
பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதனால் சாரதியின் தகவல்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
 
பேருந்துக்குள் இருந்த இருவரும் தரிப்பிடத்தில் நின்ற ஒருவரும் சம்வத்தில் உயிரிழந்துள்ளதாக Ottawa மேயர் Jim Watson தெரிவித்துள்ளார்.
 
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 9 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக Ottawa வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்.
 
இந்த பேருந்தில் 90 பேர் பயணிக்க கூடிய வசதியை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 
2013ஆம் ஆண்டு குறித்த இடத்தில் இதேபோன்ற கோர விபத்து ஏற்பட்டமையில் அதில் 6 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 

மூலக்கதை