அனுபமா அனுபவித்த தொல்லை

தினமலர்  தினமலர்
அனுபமா அனுபவித்த தொல்லை

தனுஷ் நடித்த 'கொடி' படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். அதன் பின், அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், அவர் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. இருந்தாலும், அவர் சினிமா வாய்ப்புகளுக்காக நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறார்.

இதற்காக, போட்டோ ஷூட் நடத்தி, தன்னுடைய வித விதமான புகைப்படங்களை சமூக வலைதளம் மூலம் பதிவிட்டு வருகிறார். ஆனாலும், வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி வரவில்லை. அதே நேரம், ரசிகர்கள் பலர் லைக் கொடுத்து, அனுபமாவை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

சினிமாவில் நடித்த போதும், அதற்குப் பின்னும், அவர் சினிமா நண்பர்கள், சினிமா தொழில் நுட்பக் கலைஞர்கள் என எல்லோரிடமும் நன்கு பேசி பழகி வருகிறார். இப்படிப்பட்ட பழக்கத்தை வைத்து எல்லோரும் அவரிடம் போன் நம்பர் வாங்கிச் சென்றனர்.

அப்படி போன் நம்பர் வாங்கியவர்களில் பலரும் இரவு 12, ஒரு மணி என நேரம் காலம் பார்க்காமல், போன் போட்டு இம்சை கொடுத்துள்ளனர். பார்த்தார் அனுபமா... சட்டனெ சிம் கார்டை மாற்றி விட்டு, யாருக்கும் தெரியாமல் அமைதியாகி விட்டாராம்.

மூலக்கதை