'96' பாடலுக்காக கண்ணீர் விட்டு உருகிய த்ரிஷா!

தினமலர்  தினமலர்
96 பாடலுக்காக கண்ணீர் விட்டு உருகிய த்ரிஷா!

கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான படம் '96'. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், நடிகை த்ரிஷாவும் இணைந்து நடித்திருந்தனர். காதலை உணர்வுபூர்வமாக பேசிய இந்தப் படம், பலராலும் பாராட்டப்பட்டதோடு, நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்திருக்கிறது.

இந்தப் படத்தின் வெற்றிக்கு இசை முக்கிய காரணியாக அமைந்தது. பிரபல வயலின் இசைச் கலைஞர் கோவிந்த வசந்தா, படத்துக்கு இசையமைத்திருந்தார்.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில், '96' படத்துக்கு மிகச் சிறப்பாக இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த வசந்தாவுக்கு விருது கொடுத்து கவுரவித்தனர். விழா மேடையில், கோவிந்த வசந்தா விருதைப் பெற்றுக் கொண்ட கையோடு, ரசிகர்களுக்காகவும், விருந்தினர்களுக்காகவும் படத்தின் காதலே காதலே பாடலை வயலின் வாசித்தபடியே பாடினார். இதை, பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கேட்ட நடிகை த்ரிஷா, பாடலை கேட்டு கண்ணீர் விட்டு அழுது பாடலுக்காக உருகினார்.

மூலக்கதை