ஆஸி.யுடன் முதல் ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா பவுலிங்

தினமலர்  தினமலர்

சிட்டின: இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒருநாள் கி்ரிக்கெட் இன்று சிட்னியில் துவங்குகிறது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டுவென்டி-20, நான்கு டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டுவென்டி -20 தொடரை சமன் (1-1) செய்தும், டெஸ்ட் தொடரை (2-1) வென்றது.
இ்ந்நிலையில் முதல் ஒருநாள் தொடர் சிட்னியில் இன்று( ஜன.12) காலை இந்திய நேரப்படி 7.50 மணிக்கு துவங்குகிறது. அணியில் ஷிகார் தவான், ரோஹித் சர்மா ஜோடி துவக்கம் தருகிறது. மூன்றாவது இடத்தில் ' தல' கோஹ்லி களம் காண்கிறார். மிடில் ஆர்டரில் கை கொடுக்க அம்பதி ராயுடு ரெடி. , இவர்களுக்கு பக்க பலமாக தோனி உள்ளார்.
மே.30-ல் இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வரப்போகிறது. அதற்கு ஆயத்தமாக ஆஸ்திரேலியா தொடர் இந்திய அணிக்கு நல்ல அடித்தளமாக அமையும்.

மூலக்கதை