அரசுக்கு எதிராக போராட்டம்- 22 பேர் பலி

தினமலர்  தினமலர்

கர்த்துாம்:சூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.சூடானில் ரொட்டி உற்பத்திக்கு அளித்த மானியத்தை அந்நாட்டு அரசு நிறுத்தியதால் ரொட்டி விலை உயர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்துகின்றனர். போராட்டக்காரர்கள் கடைகளை சூறையாடி பொருட்களை கொள்ளையடித்துச் செல்வதால், அவர்களை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரு தரப்பிற்கும் இடையே நடக்கும் இந்த மோதலில், கடந்த மாதம் 19 பேர் உயிரிழந்தனர்.சில நாட்களுக்கு முன் அதிபர் பஷீருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கர்த்துாமில் போட்டி பேரணிகள் நடைபெற்றது. ஓம்டர்மான் பகுதியில் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷமிட்டபடி பேரணியாக சென்ற போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் மூவர் உயிரிழந்தனர்.அரசுக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 40 பேர் வரை இறந்திருக்கலாம் என நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

மூலக்கதை