தடையை விலக்க கொரியா விருப்பம்

தினமலர்  தினமலர்

சியோல்:வடகொரியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை துவங்க, அந்நாடு மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பது:வடகொரியா அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அப்போதுதான், அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்ளும். இந்த பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டால் தான், அந்நாட்டுடன் தென் கொரியா வர்த்தக உறவை மேம்படுத்த முடியும், என்றார்.

மூலக்கதை