அமெரிக்காவில் அவசர நிலை: டிரம்ப் சூசகம்

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்:அமெரிக்காவில் சட்ட விரோதமாக ஊடுருவோரை தடுக்க, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவதற்காக, தேசிய அவசர நிலை அறிவிப்பை அறிவிக்கக் கூடும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.39,693 கோடி நிதி ஒதுக்கும்படி அந்நாட்டு பாராளுமன்றத்தில் டிரம்ப் ஒப்புதல் கேட்டார். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்.பி.,க்கள் இதை ஏற்கவில்லை.அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் கடந்த 20 நாட்களாக அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.அதனால், எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். இக்கூட்டத்தில் சுமுக முடிவு எடுக்கப்படாததால் பாதியில் டிரம்ப் வெளியேறினார்.அரசுத் துறைகள் முடக்கம் நீடிக்கும் நிலையில், தெற்கு எல்லை மாகாணமான டெக்ஸாசூக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட டிரம்பிடம், 'அவசர நிலை அறிவிப்பை நெருங்குகிறீர்களா?' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,'அவசரநிலை பிரகடனத்தை பிறப்பிக்க நினைக்கிறேன். ஏனெனில் இதற்கு எந்த செலவினமும் ஆகாது'என்றார்.

மூலக்கதை