ஆசிரியர் நியமன ஊழல் :சவுதாலாவுக்கு ஜாமின்

தினமலர்  தினமலர்

புதுடில்லி: ஹரியானா மாநிலத்தில், ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு கோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.
அரியானாவில் 2000ம் ஆண்டு நடந்த, ஆசிரியர் நியமனத்தில் ரூ. 6 கோடி ஊழல் செய்தவழக்கில், இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும், அப்போதைய முதல்வருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதலா உட்பட, 53 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், 2016ல், தந்தை, மகன் இருவருக்கும், 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது; இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தனுக்கு ஜாமின் வழங்கிட கோரி ஓம்பிரகாஷ் சவுதாலா, டில்லி ஐகோர்ட்டில் மனு செய்தார். நீதிபதி காமினி லே, ரூ. 5 லட்சம் பிணையத்தொகையுடன், ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

மூலக்கதை