காஷ்மீரில் 2ம் நாளாக நில அதிர்வு

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் 2ம் நாளாக நில அதிர்வு

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 2வது முறையாக நேற்றும் நில அதிர்வு ஏற்பட்டது. காஷ்மீர் மாநிலம், லடாக் அருகேயுள்ள லே பகுதியில் நேற்று முன்தினம் காலை நில அதிர்வு ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 4.6 புள்ளிகளாக பதிவானது. இந்நிலையில், நேற்று காலையும் காஷ்மீரில் மீண்டும் நில அதிர்வு  ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில் 3.0 புள்ளிகளாக  பதிவானது. பழைய நகரை மையமாக கொண்டு 10 கிமீ ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது, இப்பகுதியில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட 2வது நில அதிர்வாகும். இந்த நில அதிர்வு காரணமாக பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

மூலக்கதை