வனப்பகுதி, நெடுஞ்சாலைகளில் வைக்க எதிர்ப்புவிளம்பர பலகை வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவு

தினகரன்  தினகரன்
வனப்பகுதி, நெடுஞ்சாலைகளில் வைக்க எதிர்ப்புவிளம்பர பலகை வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவு

புதுடெல்லி: மலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் பகுதிகளில் விளம்பர பலகை வைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசு, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை, பாலங்கள், மலைகள் மற்றும் வனப்பகுதிகளில் அரசியல் கட்சிகள் விளம்பர பலகை வைப்பதற்கு எதிராக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.அவர் தனது மனுவில், ‘நெடுஞ்சாலைகள், பாலங்கள், மலை மற்றும் வனப் பகுதிகளில் விளம்பர பலகை வைப்பதால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுகிறது. விலங்குகளும் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அதனால், இப்பகுதிகளில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க   வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு, இந்த மனுவுக்கு 4 வாரத்தில் பதில் அளிக்கும்படி  தமிழக அரசு, தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டார்.

மூலக்கதை