அமெரிக்காவில் எந்நேரத்திலும் அவசரநிலை பிரகடனம் : அதிபர் டிரம்பின் திடீர் பேச்சால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் எந்நேரத்திலும் அவசரநிலை பிரகடனம் : அதிபர் டிரம்பின் திடீர் பேச்சால் பரபரப்பு

வாஷிங்க்டன் : அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் திடீர் அறிவிப்பு எதிரொலியாக எந்த நேரத்திலும் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஊடுருவலை கட்டுப்படுத்த தடுப்புச்சுவர் கட்டவேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்திவரும் மெக்சிகோ எல்லைக்கு சென்று பாதுகாப்பு  படையினருடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; எல்லை சுவர் கட்ட 40,000 கோடி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் முன்வராவிட்டால் அதிகாரத்தை பயன்படுத்தி அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறினார். கடந்த 20 நாட்களாக அரசுபணிகள் முடங்கி கிடப்பதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகம் கட்சியே காரணம் என்று அவர் சாடினார். அமெரிக்காவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டுவது நிச்சயம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதி அளித்தார்.

மூலக்கதை