70 வயது வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை

தினமலர்  தினமலர்
70 வயது வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை

மிஸ் கிரான்னி என்ற கொரியன் படம், ஓ பேபி எந்தா சக்ககுன்னவே என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. நந்தினி ரெட்டி இயக்கி வரும் இந்த படத்தில் சமந்தா, நாகசவுரியா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் சமந்தா 20 மற்றும் 70 வயது வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் இப்போது சமந்தா 20 வயது வேடத்தில் மட்டும் நடிக்க, 70 வயது கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமி நடிப்பதாக கூறப்படுகிறது.

70 வயது வேடத்தில் நடிக்க சமந்தா தயார் நிலையில் இருந்தபோதும், ஒர்ஜினல் பதிப்பில் வயதான பெண்ணே நடித்திருப்பதால் அதேபோன்று வயதுடைய ஒரு நடிகையை நடிக்க வைத்து விடலாம் என்று முடிவு செய்து லட்சுமியை நடிக்க வைக்கிறார்களாம்.

மூலக்கதை