என்டிஆர்., படம் : பாராட்டிய முதல்வர்

தினமலர்  தினமலர்
என்டிஆர்., படம் : பாராட்டிய முதல்வர்

என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படமான என்டிஆர் கதாநாயகுடு, ஜனவரி 9-ந்தேதி தெலுங்கில் வெளியாகியிருக்கிறது. கிரிஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் என்டிஆராக பாலகிருஷ்ணாவும், அவரது மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலனும் நடித்துள்ளனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேடத்தில் ராணா நடித்துள்ளார். இப்படத்தை நேற்று விஜயவாடாவில் உள்ள கேமிட்டல் சினிமாஸ் என்ற திரையரங்கில் பார்த்தார் முதல்வர் சந்திர பாபு நாயுடு.

படம் பற்றி சந்திரபாபு கூறுகையில், என்டிஆர் வேடத்தில் பாலகிருஷ்ணா நடிக்கிறார் என்றதும் எனக்கு பயமாக இருந்தது. ஆனால் படத்தை பார்த்தபோது அவரது நடிப்பு வியப்பாக இருந்தது. என்டிஆர் வேடத்தில் பாலகிருஷ்ணாவை தவிர யாராலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அதேபோல் எனது கதாபாத்திரமும் நன்றாக, யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். 30 ஆண்டுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை 3 மணிநேரத்தில் கிரிஷ் அழகாக சொல்லியிருக்கிறார். என்டிஆர் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ரோல்மாடலாக இருக்கிறார் என கூறியுள்ளார்.

மூலக்கதை