'சைரா' - மார்ச் மாதம் படப்பிடிப்பு நிறைவு

தினமலர்  தினமலர்
சைரா  மார்ச் மாதம் படப்பிடிப்பு நிறைவு

தென்னிந்தியத் திரையுலகத்தில் அடுத்த பெரும் எதிர்பார்ப்பாக உள்ள படம் 'சைரா'. சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா மற்றும் பலர் நடிக்க ஆந்திரா மாநிலம் ராயலசீமாவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர், சைரா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது 'சைரா'.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், ஜார்ஜியா ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஜார்ஜியாவில் நடைபெற்ற போர் காட்சிகளுக்கு மட்டும் 50 கோடி ரூபாய் செலவழித்து படப்பிடிப்பு நடத்தினார்கள். இப்படத்தின் எடுக்கப்பட்ட சில காட்சிகளை மீண்டும் எடுத்து வருவதாக டோலிவுட்டில் செய்தி பரவியது. சிரஞ்சீவிக்கு சில காட்சிகள் திருப்தியளிக்கவில்லை என இயக்குனர் சுரேந்தர் ரெட்டியிடம் சொன்னதாகவும் அதனால்தான் எடுத்தார்கள் என்றும் சொன்னார்கள்.

ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அதை படத்தின் தயாரிப்பாளரும் சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம்சரண் மறுத்துள்ளார். “மீண்டும் படப்பிடிப்பு நடத்த என்னிடம் அவ்வளவு பணமில்லை. அப்படி எந்தவிதமான ரிஷுட்டும் நடக்கவில்லை. படப்பிடிப்பு நடத்தும் இடங்களுக்கான பிரச்சினையில் தான் படப்பிடிப்பு தாமதமாகிறது. வரும் மார்ச் மாதத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும்,” என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை