கமலின் பேரனாக நடிக்கும் சிம்பு.?

தினமலர்  தினமலர்
கமலின் பேரனாக நடிக்கும் சிம்பு.?

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த முதல் படம் இந்தியன். 22 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இதன் இரண்டம் பாகம் தயாராகிறது. கமலே தொடருகிறார். கமல் உடன் காஜல் அகர்வால், சிம்பு முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். அனிருத் இசை.

தற்போது, படத்திற்கான லோகேஷன் பார்க்கும் வேலைகளில் தீவிரமாக உள்ளார் ஷங்கர். கிட்டத்தட்ட 8 நாடுகளில் இப்படம் படமாக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்தியன்-2 படத்தில் கமலின் பேரனாக சிம்பு நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில் சந்துரு கேரக்டரில் நடித்திருந்த கமலின் மகனாக, சேனாதிபதி கமலின் பேரனாக சிம்பு நடிப்பதாக சொல்கிறார்கள்.

மூலக்கதை