துபாய் பயணம் மேற்கொண்ட ராகுல்

தினமலர்  தினமலர்
துபாய் பயணம் மேற்கொண்ட ராகுல்

துபாய் : காங்., தலைவர் ராகுல் 2 நாள் பயணமாக நேற்று (ஜன.,10) மாலை துபாய் சென்றடைந்தார்.

துபாய் விமானநிலையத்தில் இந்திய வம்சாவளியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். துபாய் சென்றுள்ள ராகுல் அங்கு, இந்திய சமூகத்தினர் மற்றும் மாணவர்களை சந்தித்து பேச உள்ளார். முதல் முறையாக துபாய் சென்றுள்ள ராகுல், ஐக்கிய அரபு அமீர அமைச்சர்கள் சிலரையும் சந்திக்க உள்ளதாக கலீஜ் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.
துபாய் மற்றும் அபுதாபிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ராகுல், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 11 (இன்று) நடக்கும் இந்தோ-அரபு கலாச்சார நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இந்த விழாவில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழாவும் கொண்டாடப்படுகிறது.

மூலக்கதை