2016-17ம் ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: தொழிலாளர் நல அமைச்சக புள்ளி விவரத்தில் தகவல்!

தினகரன்  தினகரன்
201617ம் ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு: தொழிலாளர் நல அமைச்சக புள்ளி விவரத்தில் தகவல்!

புதுடெல்லி: கடந்த 2016-17ம் ஆண்டில் வேலைவாய்ப்பின்மை கணிசமாக அதிகரித்திருந்தது அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது. கடந்த 2011-12ம் நிதி ஆண்டில் நாட்டின் வேலை வாய்ப்பின்மை விகிதம் 3.3% இருந்ததாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2012-13ம் நிதியாண்டில் வேலை வாய்ப்பின்மை 4.0% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்து வந்த 2013-14ம் நிதியாண்டில் வேலை வாய்ப்பின்மை 3.4% ஆக குறைந்திருந்தது. இதையடுத்து அடுத்த இரு ஆண்டுகளில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்தது. அதில் 2015-16ம் நிதியாண்டில் 3.7% உயர்ந்தது. இதனை தொடர்ந்து 2016-17ம் நிதியாண்டில் 3.9%-ஆக அதிகரித்திருக்கிறது. 2016ம் ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வேலை வாய்ப்பின்மை அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் கங்கர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த புள்ளி விவர அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆனால் அதன் வெளியீடு அரசாங்கத்தால் நிறுத்திவைக்கப்பட்டது.

மூலக்கதை