திருகோணமலையில் சாப்பாட்டு தட்டுடன் வைத்தியசாலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

PARIS TAMIL  PARIS TAMIL
திருகோணமலையில் சாப்பாட்டு தட்டுடன் வைத்தியசாலைக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

நபரொருவர் சாப்பாடு தட்டினை எடுத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்ற சம்பவமொன்று இன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
 
சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை மீன் முள்ளு தொண்டையில் சிக்கியமையினால் அவர் அவ்வாறு சென்றுள்ளார்.
 
திருகோணமலை - ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். 
 
குறித்த நபர், தனது மகள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தொண்டையில் மீன் முள்ளு குத்தியுள்ளது.
 
இந்த நிலையிலேயே அவர் சாப்பிட்ட சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
 
பாதிக்கப்பட்ட நபர் அனுமதியறையில் கடமையாற்றும் வைத்தியரிடம், தற்பொழுது தான் மதுபோதையில் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
 
அதனால் முள்ளு தொண்டையில் இருப்பதை அவதானிக்க மாட்டார்கள் என நினைத்து சாப்பிட்ட சாப்பாட்டு தட்டுடன் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
 
குறித்த நபர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை