தி.மலையில் இருந்து 350 டன் எடை பெருமாள் சிலையை கொண்டு செல்ல தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தினகரன்  தினகரன்
தி.மலையில் இருந்து 350 டன் எடை பெருமாள் சிலையை கொண்டு செல்ல தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை : திருவண்ணாமலையில் இருந்து கர்நாடகாவுக்கு பிரம்மாண்ட சாமி சிலையை கொண்டு செல்ல தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 350 டன் எடையுள்ள சிலையை கொண்டு செல்வதால் சாலைகள், வீடுகள் சேதமடைவதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து செய்தித்தாள் தகவலின்படி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், உரிய முறையில் மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மூலக்கதை