பத்திரிக்கையாளர் ராம்சந்தர் கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு

தினகரன்  தினகரன்
பத்திரிக்கையாளர் ராம்சந்தர் கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு

ஹரியானா : பத்திரிக்கையாளர் ராம்சந்தர் கொலை வழக்கில் சாமியார் குர்மித் ராம் ரஹீம் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது. சாமியார் ராம் ரஹீம் குறித்து பத்திரிக்கையில் செய்தி வெளியானதால் கடந்த 2002ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ராம்சந்தர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ராம் ரஹீம் உட்பட 4 பேர் குற்றவாளிகள் என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குர்மித் ராம் ரஹீம் தண்டனை விவரம் ஜன., 17ல் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை