வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து பூமிக்கு வந்த ரேடியோ சிக்னல் : விஞ்ஞானிகள் ஆய்வு

தினகரன்  தினகரன்
வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து பூமிக்கு வந்த ரேடியோ சிக்னல் : விஞ்ஞானிகள் ஆய்வு

சிட்னி : வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து பூமிக்கு சமிக்கை ஒன்று வந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியில் மட்டுமே மனித உயிரினங்கள் வசிக்கின்றன. அதே நேரத்தில் வேற்றுகிரகங்களில் மனித உயிர்கள் போன்று வேறு உயிரினங்களும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. பூமிக்கு வெளியே வேறு கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ்கிறார்களா என்பதை அறிய அமெரிக்கா உட்பட பல நாடுகள் தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றன. பிரபஞ்சத்தில் வரும் வினோதமான சிக்னல்களை உலகின் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன ரேடியோ தொழில்நுட்ப கருவிகள் மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவ்வகையில் தற்போது 150 கோடி ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய ரேடியோ சிக்னல் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், கனடா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள நவீன ரேடியோ தொழில்நுட்ப கருவிகள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல் நட்சத்திர கூட்டத்தின் நடுவே இருந்த வேற்றுகிரக வாசிகள் விண்கலத்தில் இருந்து வந்ததாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 13 ரேடியோ அதிர்வுகளில் இருந்து ஒரு அசாதாரமாண சிக்னல் பூமிக்கு கிடைத்துள்ளது.  ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிமீ வேகத்தில் 150 கோடி ஒளி ஆண்டுகள் பயணித்து இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்தது கண்டறிப்பட்டுள்ளது. இந்த ரேடியோ சிக்னல் பூமிக்கு வருவது இது 2வது முறையாகும். முன்னதாக . கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து  வந்த ஒரு சமிக்ஞையை ஆய்வு செய்து வருகின்றனர். ராஸ் 128 என்று அழைக்கப்படும் சிவப்பு குள்ள நட்சத்திரத்தில் இருந்து  இந்த ரேடியோ சிக்னல் கிடைத்தது .இதனால் விண்வெளியில் வேற்றுகிரக வாசிகள் இருப்பதை கண்டறியும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை