தம்மீது அற்ப்பத்தனமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது மத்திய அரசு; பணியிட மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா

தினகரன்  தினகரன்
தம்மீது அற்ப்பத்தனமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது மத்திய அரசு; பணியிட மாற்றம் செய்யப்பட்ட அலோக் வர்மா

புதுடெல்லி: தம்மை பணியிட மாற்றம் செய்தது தவறான நடவடிக்கை என்று தீயணைப்புத்துறை மற்றும் ஊர்க்காவல் படை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அலோக் வர்மா குற்றம் சாட்டியுள்ளார். சிபிஐ என்பது வெளியாட்களின் தலையீடு இன்றி செயல்பட வேண்டிய சுதந்திரமான அமைப்பு என்று அவர் கூறியுள்ளார். அந்த அடிப்படையில் ரஃபேல் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களை காப்பாற்ற முயன்றதாகவும் ஆனால் அரசு தம்மீது ஆதாரமற்ற, அற்ப்பதனமான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும் ஊழல் புகார்களின் ஆதாரங்களை அழிக்க முயற்சி நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு தம்மை பணியிட மாற்றம் செய்திருப்பது அடிப்படையிலேயே தவறான விஷயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வரும் 31-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ள அலோக் வர்மா சிபிஐ இயக்குநர் பதவியில் தொடரலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் அவர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

மூலக்கதை