உலகத் தமிழாய்வு மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தியவர்கள்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
உலகத் தமிழாய்வு மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்தியவர்கள்!

தமிழாய்வு அறக்கட்டளை மற்றும் பன்னாட்டுத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு அறக்கட்டளை இணைந்து உலகத் தமிழாய்வு மாநாட்டை சென்னையில் நடத்தியது.

மாநாட்டில் தமிழில் தலை சிறந்த புலமை பெற்றோர் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்தினார்கள். ஆய்வுரை நிகழ்த்தியவர்கள் விவரம் வருமாறு:

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர்  முனைவர். விசயராகவன்,


சிந்துவெளி எழுத்தாய்வு நடுவத்தின் இயக்குனர் பேராசிரியர் இரா.மதிவாணன்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்புத் துறை வல்லுனர் பேராசிரியர் ப.மருதநாயகம்


மலேசியாவின் கொரிய - தமிழ்த் தொடர்பு ஆய்வாளர், முனைவர் கண்ணன் நாராயணன்
கொரிய-தமிழ் மொழித் தொடர்பு ஆய்வாளர், முனைவர் சுரேஷ் குமார்

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் ஓலைச்சுவடி ஆய்வாளர், தமிழறிஞர் முனைவர் மணி.மாறன்
தொல்லியல்த் துறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி

 திரைப்படத் துறை ஆளுமை, உலக வரலாற்றாய்வாளர், பொன் வண்ணன்

கிறித்தவக் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் தலைவர், வேர்ச்சொல் ஆய்வறிஞர். முனைவர் அரசேந்திரன்
கோவை பாவேந்தர் பேரவையைச் சேர்ந்த புலவர் செந்தலை ந.கவுதமன்

சித்த மருத்துவத்துறை மருத்துவர் அசித்தர்

தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர்,  தமிழ்- கம்போடிய தொடர்பு ஆய்வாளர் சிந்தியா விங்கசாமி
தவ்ஹீத் ஜமாத்தின் தேசியத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்

மூத்த ஊடகவியலாளர் பார்த்திபன்

பழந்தமிழர் இசைக் கருவிகள் ஆய்வாளர் கோசை நகரான்

பழந்தமிழர் போர்க் கருவிகள் ஆய்வாளர் சுரேஷ்

கடல் சார்த் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் மற்றும் குமரிக்கண்ட சிறப்பு கள ஆய்வாளரான ஒரிசா பாலு என்ற சி.பாலசுப்பிரமணி

இந்தியாவுக்கான தென் கொரிய நாட்டுத் தூதர், ஹியாங் தே கிம் ஆகியோர் பங்கேற்று ஆய்வுரை நிகழ்த்தினர்.

மூலக்கதை