தலிபான்கள் தாக்குதலில் 21 போலீஸ் பலி

தினகரன்  தினகரன்
தலிபான்கள் தாக்குதலில் 21 போலீஸ் பலி

காபூல்:  ஆப்கானிஸ்தானில் ராணுவம், போலீசார் மீது தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ராணுவ வீரர்களும், போலீசாரும் அதிகளவில் கொல்லப்பட்டு வருகின்றனர்.இதேபோல், நேற்றும் நேற்று முன்தினமும் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 21 போலீசார் கொல்லப்பட்டனர்.மேற்கு பாத்கிஸ் மாகாணத்தில் காவல் நிலையங்கள் மீது தலிபான்கள் நேற்று நடத்திய  தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். இதேபோல், பாக்லான் மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் 7 போலீசாரும், தக்கார் மாகாணத்தில் 8 போலீசாரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களில் 23 பேர் காயமடைந்தனர்.

மூலக்கதை