காங்கோ அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் வெற்றி

தினகரன்  தினகரன்
காங்கோ அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் வெற்றி

கின்ஷாசா: காங்கோவில் கடந்த 2001ம் ஆண்டில் இருந்து ஜோசப் கபிலா அதிபராக இருந்து வந்தார். முதல் முறையாக இங்கு கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில், எதிர்க்கட்சி தலைவரான பெலிஸ் ஷிஷிகேடி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.ஆளும் ஜோசப் கபிலா கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட இமானுவேல் ராமசானி, 40 லட்சம் வாக்குகள் பெற்றார். ஷிஷிகேடி 70 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, காங்கோவின் புதிய அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.

மூலக்கதை