தேசிய சீனியர் வாலிபால் போட்டி கர்நாடகா, கேரள சாம்பியன்கள்

தினகரன்  தினகரன்
தேசிய சீனியர் வாலிபால் போட்டி கர்நாடகா, கேரள சாம்பியன்கள்

சென்னை: தேசிய சீனியர் வாலிபால் இறுதிப்  போட்டியில் கர்நாடகா ஆண்கள் அணி  முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில்  கேரள அணி,  ரயில்வே அணியை வென்று  சாம்பியனானது.சென்னையில் ஜன.2ம் தேதி அகில  இந்திய அளவிலான 67வது தேசிய சீனியர் வாலிபால் போட்டி தொடங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் 29 அணிகளும், பெண்கள் பிரிவில் 25 அணிகளும் களமிறங்கின. தொடர்ந்து நேற்று  முன்தினம் அரையிறுப்போட்டிகள்  நடைப்பெற்றன. ஆண்களுக்கான முதல் அரையிறுதிப் ேபாட்டியில்  தமிழ்நாடு அணி 3-1 என்ற செட்கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.அதேபோல் இன்னொரு அரையிறுதிப் போட்டியில் கர்நாடாகா அணி பஞ்சாப் அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்றது.பெண்களுக்கான முதல் அரையிறுதிப்போட்டியில்  ரயில்வே அணி 3-0 என்ற செட் கணக்கில்  மகாராஷ்டிரா அணியை சாய்த்தது. தொடர்ந்த இன்னொரு அரையிறுதியில்   கேரளா அணி  மேற்குவங்க அணியை 3-0 என்ற செட்  கணக்கில் வெற்றிப் பெற்றது. இந்நிலையில் நேற்று இறுதிப்போட்டிகள், 3, 4ம் இடத்துக்கான போட்டிகள் நடைப்பெற்றன. ஆண்கள் பிரிவில் 3ம் இடத்துக்கான போட்டியில்  கேரளா-பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கேரளா 25-20, 25-14, 15-18 என்ற புள்ளிகள்  கணக்கில் வென்று 3வது இடத்தை பிடித்து.பெண்களுக்கான 3, 4ம் இடத்துக்கான போட்டியில் மகாராஷ்டிரா அணி 25-30, 25-14, 25-18 என்ற நேர் செட்களில் மேற்கு வங்கத்தை வீழ்த்தி 3ம் இடத்தை பெற்றது.தொடர்ந்து நேற்று மாலை நடைப்பெற்ற பெண்களுக்கான இறுதிப் போட்டியில் இந்தியன் ரயில்வே - கேரள அணிகள் மோதின.  அதில் கேரளா அணி  20-25, 25-17, 17-25, 25-19, 15-8   என்ற செட்களில் வென்று சாம்பியன்  பட்டத்தை கைப்பற்றியது.ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடின. அதில்  கர்நாடகா அணி 21-25, 36-34, 25-18, 25-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. பெடரேஷன் கோப்பைஇந்தப் போட்டியில் ஆண்கள் பிரிவில் காலிறுதிப் போட்டியில் விளையாடிய  8 அணிகளும்,  பெண்கள் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய 4 அணிகளும் பெடரேஷன் கோப்பை வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில்  பங்கேற்க தகுதிப் பெற்றுள்ளன. பெடரேஷன் கோப்பைப் போட்டி  ஏப்.28ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை திருப்பூரில் நடைபெறும்.

மூலக்கதை