ஃபிஸ்ட்பால் போட்டி வேலூர் மாவட்டம் சாம்பியன்

தினகரன்  தினகரன்
ஃபிஸ்ட்பால் போட்டி வேலூர் மாவட்டம் சாம்பியன்

ஓமலூர்: மாநில அளவிலான 2வது ஃபிஸ்ட்பால் போட்டியில் வேலூர் மாவட்டம் சாம்பியன் பட்டத்தை வென்றது.தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையிலான 2வது சீனியர் மாநில ஃபிஸ்ட் பால் போட்டி சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைப்பெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் வேலூர், சென்னை உட்பட 16 மாவட்டங்களை சேர்ந்த அணிகள்  கலந்துக் கொண்டன. பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம், திருவள்ளூர் என 16 மாவட்டங்களை சேர்ந்த அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் வேலூர் மாவட்டம் 11-7, 13-12 என்ற நேர் செட்களில் சேலம்  மாவட்டத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் வென்றது. இதே பிரிவில் 3, 4ம் இடங்களுக்கான போட்டியில் சென்னை மாவட்டம் 11-7, 11-5 என்ற நேர் செட்களில் நாமக்கல் மாவட்டத்தை வென்று 3ம் இடம்  பிடித்தது.பெண்களுக்கான இறுதிப்போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டம் 11-8, 5-11, 12-11 என்ற புள்ளிகள் கணக்கில் நாமக்கல் மாவட்டத்தை வென்றது. இப்பிரிவில் 3, 4ம் இடங்களுக்கான போட்டியில் சென்னை மாவட்டம் 7-11, 11-8,  11-6 என்ற செட்களில் கோயமுத்தூர் மாவட்டத்தை வீழ்த்தி 3ம் இடம் பிடித்தது.போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கிரேஸ்லின், ஆண்கள் பிரிவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி ஆகியோர் தொடரின் சிறந்த ஆட்டக்காரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மூலக்கதை