சிறிய நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதி ஜி.எஸ்.டி., விலக்கு வரம்பு இரு மடங்கு உயர்வு

தினமலர்  தினமலர்
சிறிய நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதி ஜி.எஸ்.டி., விலக்கு வரம்பு இரு மடங்கு உயர்வு

புதுடில்லி:குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு நிம்­மதி அளிக்­கும் வகை­யில், ஜி.எஸ்.டி., விலக்கு பெறு­வ­தற்­கான, ஆண்டு விற்­று­மு­தல் வரம்பு, 20 லட்­சத்­தில் இருந்து, 40 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.


டில்­லி­யில் நேற்று, மத்­திய நிதி­ய­மைச்­சர் அருண் ஜெட்லி தலை­மை­யில், மாநில அர­சு­களின் அமைச்­சர்­கள் பங்­கேற்ற, 32வது, ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டம் நடை­பெற்­றது.இதை­ய­டுத்து, அருண் ஜெட்லி, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­தா­வது:தற்­போது, ஆண்டு விற்­று­மு­தல், 20 லட்­சம் ரூபாய் வரை உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது.


இந்த வரம்பை உயர்த்த வேண்­டும் என, பல்­வேறு தொழில் கூட்­ட­மைப்­பு­கள் கோரிக்கை விடுத்­தன. அதை­யேற்று, குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் பயன் பெறும் வகை­யில், ஜி.எஸ்.டி.,க்கான விற்­று­மு­தல் வரம்பை, இரு மடங்கு உயர்த்தி, 40 லட்­சம் ரூபா­யாக நிர்­ண­யிக்க, கூட்­டத்­தில் ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டது.


அது­போல, வட கிழக்கு மாநி­லங்­களில், ஜி.எஸ்.டி., விலக்­கிற்கு, ஆண்டு விற்­று­மு­தல் வரம்பு, 10 லட்­சம் ரூபா­யில் இருந்து, 20 லட்­சம் ரூபா­யாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.


சேவை துறை


மேலும், ‘காம்­போ­சி­ஷன்’ திட்­டத்­தில், நிறு­வ­னங்­க­ளுக்­கான, ஆண்டு விற்­று­மு­தல் வரம்பு, 1 கோடி­யில் இருந்து, 1.50 கோடி ரூபா­யாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.அத்­து­டன், இத்­திட்­டத்­தில், ஆண்­டுக்கு, 50 லட்­சம் ரூபாய் வரை வரு­வாய் ஈட்­டும் சேவை துறை நிறு­வ­னங்­களும், 6 சத­வீத வரி செலுத்தி இணைய, கூட்­டத்­தில் ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டது.காம்­போ­சி­ஷன் திட்­டத்­தில் இணை­யும் நிறு­வ­னங்­கள், காலாண்­டுக்கு ஒரு முறை, வரி கணக்கு தாக்­கல் செய்ய வேண்­டும்.


கேரள அர­சுக்கு, மாநி­லங்­கள் இடை­யி­லான வர்த்­த­கத்­தில், 1 சத­வீ­தம் இயற்கை இடர்ப்­பாட்டு வரி வசூ­லிக்க, அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு ஆண்­டு­க­ளுக்கு, இந்த வரியை, கேரள அரசு வசூ­லிக்­க­லாம்.ரியல் எஸ்­டேட் மற்­றும் லாட்­டரி விற்­ப­னைக்­கான, ஜி.எஸ்.டி., தொடர்­பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க, இரு குழுக்­கள் அமைப்­பது என, கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டது.இவ்­வாறு அவர் பேசி­னார்.


பண­ம­திப்பு நீக்­கம், ஜி.எஸ்.டி., அறி­மு­கம் போன்­ற­வற்­றால் பாதிக்­கப்­பட்ட குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு ஆறு­தல் அளிக்­கும் வகை­யில், ஜி.எஸ்.டி., கவுன்­சில் அறி­விப்பு உள்­ள­தாக, தொழில் கூட்­ட­மைப்­பு­கள் வர­வேற்பு தெரி­வித்­துள்ளன.


துணி பைக­ளுக்கு வரி குறைக்கதமி­ழக அமைச்­சர் கோரிக்கை


ஜி.எஸ்.டி., கவுன்­சில் கூட்­டத்­தில், தமி­ழக அரசு சார்­பில் பங்­கேற்க வந்த, தமி­ழக மீன்
­வ­ளத்­துறை அமைச்­சர் ஜெய­கு­மார், நிரு­பர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:தமி­ழக அரசு சார்­பில், 62 பொருட்­களை முன்­வைத்து, வரி குறைப்பு கோரப்­பட்டு, பல பொருட்­க­ளுக்கு சலுகை பெற்­றுள்­ளோம். தீப்­பெட்டி தொழி­லுக்கு, வரியை, 12 சத­வீ­தம் ஆக்க வேண்­டு­மென்­பதை பரி­சீ­லிக்க, மத்­திய அரசு சம்­ம­தித்­துள்­ளது.


‘வெட் கிரைண்­டர்’கள், மீன்­பிடி உப­க­ர­ணங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு, 5 சத­வீ­தம் வரை குறைக்க கோரி­யுள்­ளோம். பிளாஸ்­டிக்­கிற்கு தடை விதிக்­கப்­பட்டு விட்­ட­தால், துணிப்­பை­க­ளுக்கு தேவை ஏற்­பட்­டுள்­ளது.எனவே, சுற்­றுச்­சூ­ழலை பாது­காக்­கும், துணிப்பை உற்­பத்­திக்கு, 5 சத­வீ­தம் மட்­டுமே வரி இருக்க வேண்­டு­மென வலி­யு­றுத்தி உள்­ளோம். அலு­மி­னிய பாத்­தி­ரங்­கள், மறு­சு­ழற்சி பிளாஸ்­டிக் பொருட்­கள் ஆகி­ய­வற்­றுக்கு, 12 சத­வீ­தம் வரை வரி குறைப்பு தேவை.
இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை