சீனாவில் இளம்பெண்ணின் இதயத்துடிப்பை 72 மணி நேரம் நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

தினகரன்  தினகரன்
சீனாவில் இளம்பெண்ணின் இதயத்துடிப்பை 72 மணி நேரம் நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

புஜியான்: சீனாவில் இளம்பெண் ஒருவருக்கு 72 மணி நேரம் இதயத்துடிப்பை நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் 26 வயதான மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து பின் மீண்டும் இணைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிட்டத்தட்ட 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அந்தப் பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை