சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

PARIS TAMIL  PARIS TAMIL
சி.பி.ஐ. இயக்குனர் பதவி பறிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு

இதைத்தொடர்ந்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய பரிந்துரையின் பேரில் அலோக் வர்மா மற்றும் அஸ்தானா இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அதிரடியாக கட்டாய விடுப்பில் அனுப்பியது. மேலும் அலோக் வர்மாவின் அதிகாரங்களையும் பறித்த மத்திய அரசு, சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமித்தது.

சி.பி.ஐ. வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்ததால்தான், அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இது ஒருபுறம் இருக்க, தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்த மூத்த வக்கீல் பாலி நாரிமன், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இதில் கடந்த 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் சி.பி.ஐ. இயக்குனரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லது என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மேலும் அவர் தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கிய நீதிபதிகள், அவரது அனைத்து அதிகாரங்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதேநேரம் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டு விசாரணை முடியும் வரை எந்த கொள்கை முடிவையும் அலோக் வர்மா எடுக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், அவர் மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு தான் எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

இந்த குழு ஒரு வாரத்துக்குள் கூடி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர். அத்துடன் இடைக்கால இயக்குனரான நாகேஸ்வர ராவின் நியமனமும் ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அலோக் வர்மா நேற்றுமுன்தினம் தனது பொறுப்புகளை மீண்டும் ஏற்றுக்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன.

இந்தநிலையில் அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்று மீண்டும் இந்த கூட்டம் நடந்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை அதிரடியாக நீக்கி முடிவு எடுக்கப்பட்டது. ஊழல் மற்றும் பணியில் அலட்சியம் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

3 பேர் கொண்ட இந்த தேர்வுக்குழுவில் மல்லிகார்ஜுன கார்கே மட்டும், அலோக் வர்மாவின் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் மீதமுள்ள 2 உறுப்பினர்களின் (பிரதமர் மோடி, தலைமை நீதிபதியின் பிரதிநிதி ஏ.கே.சிக்ரி) முடிவின்படி அலோக் வர்மாவின் நீக்கம் உறுதி செய்யப்பட்டது.

அலோக் வர்மா நீக்கத்தை தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பு தற்காலிகமாக நாகேஸ்வரராவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. புதிய இயக்குனர் நியமிக்கப்படும் வரை அவர் இயக்குனர் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேநேரம் பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக் வர்மா பொது தீ தடுப்பு பணிகள், சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மீண்டும் பொறுப்பேற்ற மறு நாளிலேயே சி.பி.ஐ. இயக்குனர் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலோக் வர்மா வருகிற 31-ந்தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த கூட்டத்தை அவசரமாக கூட்டுவது தொடர்பாகவும் பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து இருந்தார். ரபேல் விவகாரம் காரணமாக சி.பி.ஐ. தலைவரை பதவி நீக்குவதற்காகவே இந்த அவசரம் காட்டப்படுவதாக ‘டுவிட்டர்’ தளத்தில் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.

நாட்டின் தலைமை விசாரணை அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்தவர் அலோக் வர்மா.
 
இவருக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே கடந்த ஆண்டு மோதல் வெடித்தது. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற் படுத்தினர்

மூலக்கதை