மனைவியை பிரிந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ்

தினமலர்  தினமலர்
மனைவியை பிரிந்தார் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ்


நியூயார்க்: அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெப் பெஜோஸ் ,தனது மனைவியை விவகாரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெப் பெஜோஸ் ,53 உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு 137 பில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இவருக்கு மெக்கென்சி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில், ஜெப் பெஜோஸ் ,மெக்கென்சி தம்பதியினர் கூட்டாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது,, நாங்கள் பரஸ்பரம் விவாகரத்து செய்துகொண்டு, நண்பர்களாக இருக்க முடிவு செய்துள்ளோம்” “இனி அவரவர் தனித்தனியாக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும், நாங்கள் குடும்பமாக இருப்போம். எதிர்காலத்தில் எங்களின் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக, நண்பர்களாக, செயல்படுவோம்” இவ்வாறு டுவிட்டரில் கூறியுள்ளனர்.
அமேசான் நிறுவனத்தின் பெருமளவு பங்குகள் மெக்சென்சிக்கு உள்ளன. தற்போது இருவரும் பிரிவதால் பங்குகளும் பிரியும். இதனால் அமேசான் நிறுவனத்தின்எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது

மூலக்கதை