சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா தோல்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை சிமோனா தோல்வி

சிட்னி: சிட்னி சர்வதேச டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலேப்  தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தாண்டில் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் அடுத்த வாரம் துவங்குகிறது.

இதற்கு முன்னோட்டமாக கருதப்படும் சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 2வது சுற்றில், உலகின் முதல்நிலை வீராங்கனையான  சிமோனா ஹாலேப், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே ஆகியோர் பலப்பரிட்சை நடத்தினர்.

ஆட்டம் தொடங்கியது முதலே ஆஷ்லே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில், சிமோனா ஹாலேப் 6-4, 6-4 என்ற  நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார்.

சிமோனா கடந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் 2வது இடம் பிடித்திருந்தார்.

அக்டோபரில் நடைபெற்ற டென்னிஸ் இறுதித் தொடரின்போது காயத்தால் வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய முதல் போட்டி இதுவாகும்.

போட்டி குறித்து சிமோனா கூறுகையில், ‘‘இது சிறந்த ஆட்டமாக இருந்தது. நன்றாக விளையாடிய நிலையிலும் போதிய புள்ளிகளை எடுக்க தவறிவிட்டேன்.

ஆஷ்லே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெற்றிக்கு தகுதியானவர்’’ என்றார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் தொடங்கவுள்ள நிலையில், தோல்வியை சந்தித்தது சிமோனாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.   சிமோனாவை வென்ற ஆஷ்லே, தனது அடுத்த சுற்றில், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் உடன் மோதுகிறார்.  

.

மூலக்கதை