கலிபோர்னியா தீவின் கலங்கரை விளக்கத்தை பாதுகாக்க ரூ.91 லட்சம் சம்பளம்!

தினகரன்  தினகரன்
கலிபோர்னியா தீவின் கலங்கரை விளக்கத்தை பாதுகாக்க ரூ.91 லட்சம் சம்பளம்!

வாஷிங்க்டன் : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு அருகில் இருக்கும் ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கத்தை பாதுகாக்க ரூ. 91 லட்சம் சம்பளம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சான் பிரான்ஸிஸ்கோ தீவு பகுதியில் உள்ள ஈஸ்ட் பிரதர் லைட் ஸ்டேஷன் என்று அழைக்கப்படும் கலங்கரை விளக்கம் கடந்த 1874ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பிறகு 1960ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு தொண்டு நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கலங்கரை விளக்கம் அமைந்திருக்கும் இடம் மிகவும் தனித்துவம் ஆனது என்றும் இதில் உணவு மற்றும் தங்குமிடம் கொண்ட வசதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கலங்கரை விளக்கத்தை பார்த்து கொள்வதற்காக ஆட்கள் தேடப்பட்டு வருவதாக கலங்கரை விளக்கத்தை பராமரித்து வரும் தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. படகுகளை இயக்க உரிமம் பெற்றிருக்க வேண்டும், கடல் பயணங்கள் பற்றிய போதிய அறிவு ஆகியவை இந்த வேலைக்கான தகுதிகள் ஆகும். இந்த வேலைக்கு இருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இருவருக்கும் சேர்ந்து ரூ.91 லட்சம் சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை