அவுஸ்திரேலிய பிரதமருக்கு இரு இடது கால்களா? சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்

PARIS TAMIL  PARIS TAMIL
அவுஸ்திரேலிய பிரதமருக்கு இரு இடது கால்களா? சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனின் தனிபட்ட பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள குடும்பமாக எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் அவருக்கு இரண்டு கால்கள் உள்ளது போன்று இருப்பதால் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
 
அவுஸ்திரேலியாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தற்போதைய பிரதமரான ஸ்காட் மோரிசனின் பேஸ்புக் பக்கத்தில் அவர் குடும்பமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டது.
 
இந்நிலையில் புகைப்படத்தை பார்த்த மக்கள் அதில் ஸ்காட் மோரிசனின் இடது கால் பகுதியில் இரு கால்கள் இருப்பதை கண்டனர். இதை அடுத்து பல்வேறு தரப்பினர் சார்பாகவும் நெட்டிசன்கள் மூலம் பிரதமரை கிண்டலடித்து வருகின்றனர்.
 
தொடர்ந்து, இது குறித்து விளக்கமளித்த பிரதமர் மோரிசன், இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்றும். என்னுடைய பேஸ்புக் பக்கத்தை கவனிக்கும் பணியாளர், காலணி அழுக்காக இருப்பதை மறைக்கும் முயற்சியில் இப்படி ஒரு தவறு செய்து விட்டார் என்றும், தன்னுடைய அனுமதி இல்லாமல் நடைபெற்ற பிழை என்றும் தெரிவித்தார்.
 
இதற்கும் விடாமல் பல நெட்டிசன்களால் பல்வேறு தரப்பினரும் மூழ்கடிக்க செய்துள்ளனர். மேலும் பல வண்ண, வண்ண காலணிகள் போன்று அவரது புகைப்படத்தை எடிட் செய்து பேஸ்புக் உள்ளிட்ட மற்ற சமூக வலை தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்ந்து அவரது தேர்தலை பாதிக்கும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
 
 

#auspol story of 2019: our latest PM (ScoMo) had nice white shoes photoshopped onto his feet for his official https://t.co/eXNtcX7xTa site?! Yup. Regular bloke. Our tax dollars hard at work. #shoegate pic.twitter.com/kA0gG0yy9L

— Luke (@lukerhn) January 8, 2019

மூலக்கதை