தேசிய சீனியர் வாலிபால் தொடர் : பைனலுக்கு முன்னேறியது தமிழகம்

தினகரன்  தினகரன்
தேசிய சீனியர் வாலிபால் தொடர் : பைனலுக்கு முன்னேறியது தமிழகம்

சென்னை: தேசிய சீனியர் வாலிபால் தொடரின் பைனலில் விளையாட தமிழக ஆண்கள் அணி  தகுதி பெற்றது.சென்னையில் நேற்று நடந்த பரபரப்பான அரை இறுதியில் கேரள அணியுடன் மோதிய தமிழகம் 25-27 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கியது. பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய தமிழக அணி வீரர்கள் 25-14, 25-18, 25-16 என அடுத்த 3 செட்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக நடந்த மற்றொரு அரை இறுதியில் கர்நாடகா- பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கர்நாடகா அணி 25-13, 25-22, 25-20 என்ற நேர் செட்களில் வென்றது. இறுதிப் போட்டியில் தமிழகம் - கர்நாடகா மோதுகின்றன. மகளிர் பிரிவில் நடந்த முதல் அரை இறுதியில்  ரயில்வே அணி 25-19, 25-18, 25-19 என்ற நேர் செட்களில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தியது. 2வது அரை இறுதியில் கேரளா - மேற்கு வங்கம் மோதின. இப்போட்டியில் கேரளா 25-18, 25-9, 25-9 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றது. மகளிர் பைனலில் ரயில்வே - கேரளா பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

மூலக்கதை