தமிழகம்- கொரியா இடையே நெருங்கிய உறவுகள் இருந்துள்ளது-தென் கொரிய தூதர் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தமிழகத்திற்கும் கொரியாவிற்கும் இடையே நெருங்கிய உறவுகள் இருந்து உள்ளதாக, இந்தியாவிற்கான தென் கொரிய தூதர் கியூஞ் சூ கிம் தெரிவித்து உள்ளார். 

முதலாம் உலகத் தமிழ் மாநாடு மற்றும் தமிழாய்வு அறக்கட்டளை தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான தென் கொரிய தூதர் கியூஞ் சூ கிம் கலந்து கொண்டு பேசியதாவது:

பாண்டியநாட்டைச் சேர்ந்த செம்பவளம் என்ற பெண் பழங்காலத்தில் கொரியா வந்தார். அதுமட்டுமல்ல, அப்போது கொரிய மன்னர் கிங்ஸ்ரோ என்பவரை மணந்து கொண்டார். தமிழகத்தைச் சேர்ந்த செம்பவளம் தற்போது கியோ கவான் கொக் என்று அழைக்கப்படுகிறார்.

எனது மூதாதையரும் தமிழ்ப் பெண்ணை மணந்துள்ளனர். தமிழர்- கொரியர் உறவுகள் குறித்து விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகப் பெண் செம்பவளத்தின்  படத்தை தென் கொரிய தூதர் வெளியிட்டார்.

மூலக்கதை